search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் காதலியை கைபிடிக்க உதவி செய்யுங்கள்: மோடிக்கு மாணவர் வேண்டுகோள்
    X

    என் காதலியை கைபிடிக்க உதவி செய்யுங்கள்: மோடிக்கு மாணவர் வேண்டுகோள்

    ‘என் காதலியை கைபிடிக்க உதவி செய்யுங்கள்’ என பிரதமர் நரேந்திர மோடிக்கு மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    சண்டிகாரில் தினசரி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. அதில் ஏராளமான மக்கள் மனு கொடுக்கின்றனர். அவற்றில் 60 சதவீத மனுக்கள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் அற்பத்தனமாகவும், விளையாட்டுத்தனமாகவும் உள்ளன.

    சமீபத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மனு கொடுத்தார். அந்த மாணவர் ஒரு நர்சை காதலிக்கிறார்.

    இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும். இருவரது பெற்றோரையும் சமாதானம் செய்து எனது திருமணத்தை நடத்தி வைத்து காதலியை கரம்பிடிக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இம்மனு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சண்டிகார் நிர்வாக அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலக குறைதீர்ப்பு மையத்துக்கு மாதந்தோறும் 400 மனுக்கள் வருகின்றன. இவற்றில் இன்னும் சில வேடிக்கையான மனுக்களும் உள்ளன.

    சண்டிகார் நகரம் 114 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு 10 லட்சம் மக்கள் உள்ளனர். இதனால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளை பிடிக்க போலீசாரால் விரைந்து செல்ல முடியவில்லை.

    எனவே போலீசாருக்கு ஹெலிகாப்டர் வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு மனுவோ மிகவும் சாதாரண வி‌ஷயத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் வீட்டு தோட்டத்தில் பூத்த மலர்களை யாரோ பறித்து சென்று விடுகிறார்களாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×