search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுக்க முடிவு
    X

    நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுக்க முடிவு

    நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சத்தீஷ்கார் மாநிலம், சுக்மாவில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினர் 25 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    இப்படி பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக உயிர் இழக்கிறபோது, அவர்களது குடும்பங்களை வழிநடத்துவதற்கு யாரும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இனி நாட்டுக்காக உயிர் இழக்கிற பாதுகாப்பு படையினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுத்து உதவிக்கரம் நீட்டுவார்கள்.

    மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் பலியாகிறபோது அவர்களது குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க கவுரவ செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி கூறுகையில், “நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரணத்தை, குடும்ப ஓய்வூதியத்தை, பணிக்கொடையை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெற்றுத்தருவார்கள். அவர்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கவும் உதவுவார்கள். அதே நேரத்தில் நேரடியாக நிதி உதவி எதையும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×