search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலி - நடிகர் படுகாயம்
    X

    கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலி - நடிகர் படுகாயம்

    மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தா நகரின் தெற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார். அவருடன் வந்த பிரபல நடிகர் படுகாயமடைந்தார்.
    கொல்கத்தா:

    மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

    இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள தனது நண்பரும் வங்காளி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருமான விக்ரம் சாட்டர்ஜி என்பவருடன் இவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

    தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ராஷ்பெஹாரி நிழற்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு காருக்கு வழிவிட ஒதுங்கியபோது இவர்கள் சென்ற கார் சாலை தடுப்பின்மீது மோதி தலைக்குப்புற புரண்டது. இந்த கோர விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார். அவருடன் வந்த நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்தார்.

    கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் சாட்டர்ஜி, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கோஜ்’ உள்ளிட்ட சில வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×