search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: ரே‌ஷன் மண் எண்ணெய் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
    X

    ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: ரே‌ஷன் மண் எண்ணெய் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்

    நாடு முழுவதும் ரே‌ஷன் மண்எண்ணைக்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    ஏழைகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியம் அளித்து வருகிறது.

    இதனால் அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுவதால் அதனை படிப்படியாக குறைக்கவும் மானியம் ஏழைகளுக்கு நேரடியாக சென்று சேரவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தற்போது சமையல் கியாஸ் மானியம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    அடுத்த கட்டமாக ரேசன் பொருட்களுக்கான மானியத்தையும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    இதில் ரேசன் மண்எண்ணைக்கான நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அசாம், மேகாலயா, காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.


    மத்திய அரசின் நேரடி மானியம் பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆகும். தமிழகத்தில் ரேசன் ஸ்மார்ட் கார்டு பெறுவதற்காக ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இது தவிர கழிவறை கட்டுவதற்கான ரூ. 4000 மானியத்தொகை பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    Next Story
    ×