search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்: மோடி மீண்டும் பிரதமராக அமித்ஷா அதிரடி வியூகம்
    X

    பாராளுமன்ற தேர்தல்: மோடி மீண்டும் பிரதமராக அமித்ஷா அதிரடி வியூகம்

    2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலிலும் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் அமித்ஷா வியூகம் அமைக்க தொடங்கி விட்டார்.
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியின் அலையால் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அந்த கட்சி 280 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜனதா சிறப்பான வெற்றியை பெற்றது.

    உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல் உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகியவற்றிலும் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றியை பெற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் ஆதிரடியான வியூகம் காரணமாகவே மாபெரும் வெற்றியை பெற முடிந்தது.

    2019 பாராளுமன்ற தேர்தலிலும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அமித்ஷா வியூகம் அமைக்க தொடங்கி விட்டார். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் அவர் தீவிரம் கொண்டுள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் 600 பொறுப்பாளரை நியமிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதில் 542 பேர் முழு நேர பொறுப்பாளர்களாக செயல்படுகிறார்கள், மீதியுள்ளவர்கள் மேற்பார்வையாளர்களாக இருப்பார்கள். அனைத்து தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 3.25 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள்.

    ஒவ்வொரு பூத் மட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுவார்கள்.

    மேற்கு வங்காளம், ஒடிஷா, தெலுங்கானா, குஜராத் மற்றும் லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டு கட்சியை பலப்படுத்து நடடிக்கைகள் குறித்து விளக்கப்படும்.

    மோடியின் சாதனைகள், கட்சியின் சித்தாத்தங்கள் குறித்து இந்த பொறுப்பாளர்கள் மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்வார்கள்.
    Next Story
    ×