search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார் - நம் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியா நடக்கிறது?: சசி தரூர்
    X

    எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார் - நம் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியா நடக்கிறது?: சசி தரூர்

    எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார், நம் நாட்டில் ஜனாதிபதி முறையிலான தனிநபர் ஆட்சி நடக்கிறது என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடியை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது.

    தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மூன்று வருடங்களாக பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சியில் மோடியை மட்டுமே முன்னிறுத்தி வருவதாக அவ்வவ்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

    இந்நிலையில், எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார், நம் நாட்டில் ஜனாதிபதி முறையிலான தனிநபர் ஆட்சி நடக்கிறது என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், “நமது நாட்டில் தற்போது தனிநபர் ஆளும் ஜனாதிபதி முறையிலான ஆட்சி நடைபெறுவது போல் தெரிகிறது. தனி நபர் ஆட்சியை நோக்கி நம்முடைய நாடு சென்று கொண்டிருக்கிறது. ஜனாதிபதி முறையிலான ஆட்சி சோதிக்கப்பட வேண்டி உள்ளது” என்றார்.
    Next Story
    ×