search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி அதிபர் எர்டோகன் 30-ம் தேதி இந்தியா வருகிறார்: என்.எஸ்.ஜி. குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு
    X

    துருக்கி அதிபர் எர்டோகன் 30-ம் தேதி இந்தியா வருகிறார்: என்.எஸ்.ஜி. குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் வரும் 30-ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    புதுடெல்லி:

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் வரும் 30-ம் தேதி இந்தியா வருகிறார். மே 1ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கான முயற்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவும் துருக்கியும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் வர்த்தகம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    துருக்கி அதிபர் சுற்றுப்பயணம் குறித்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் (மேற்கு) தெரிவித்தார். ஆனால், என்.எஸ்.ஜி. முயற்சி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார்.

    என்.எஸ்.ஜி. அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி, இந்தியா அந்த அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று சீனா கூறி வருகிறது. இந்த கருத்துதான், இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    ஒருமித்த கருத்து என்ற கொள்கையுடன் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு நாடு இந்தியாவிற்கு எதிராக ஓட்டளிக்குமாயின் அது இந்தியாவின் முயற்சிக்கு எதிராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×