search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டமாஸ்காஸ் விமான நிலையத்தை தாக்கியது இஸ்ரேலிய ஏவுகணையா? அதிர வைக்கும் தகவல்கள்
    X

    டமாஸ்காஸ் விமான நிலையத்தை தாக்கியது இஸ்ரேலிய ஏவுகணையா? அதிர வைக்கும் தகவல்கள்

    சிரிய தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையத்தில் இன்று காலை நடந்த மிகப்பெரும் தாக்குதலுக்கு இஸ்ரேலிய ஏவுகணைதான் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயுத குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் அருகே மிகப்பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த குண்டு வெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது?, பலியானவர்கள் எத்தனை பேர்? என்ற விபரங்கள் இன்னும் சரியாக தெரியாத நிலையில், இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைதான் இத்தாக்குதலுக்கு காரணம் என சிரிய ஊடகமான சனா தெரிவித்துள்ளது.



    சிரியா மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் உள்ள சில பகுதிகளை நிர்வகிப்பதில் இரு நாடுகளுக்கு இடையே பகை நீடித்து வரும் நிலையில், இவ்விவகாரம் காரணமாகதான் இஸ்ரேல் சில ஏவுகணைகளை டமாஸ்கஸ் நோக்கி செலுத்தி வெடிக்க வைத்திருக்கலாம் என சனா வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

    சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் இது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில், நிலைகுலைந்து போயிருக்கும் அந்நாட்டில் மேலும் ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேல் தன்னுடைய ராணுவ பலத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது.
    Next Story
    ×