search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் முறையாக 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்: 30 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
    X

    முதல் முறையாக 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்: 30 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

    மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ முதல் முறையாக 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்ததையடுத்து, 30 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.
    மும்பை:

    இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் விறுவிறுப்பாகவும், ஏறுமுகத்திலும் இருந்தது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. முதல் முறையாக சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும் கணிசமாக உயர்ந்தது. சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் விறுவிறுப்பாக சென்றதால், 30 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடினர்.

    இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 30,133 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 9351 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

    மும்பை பங்குச்சந்தையில் ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 949 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 1957 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 139 பங்குகளில் மாற்றம் எதுவும் இல்லை.

    முன்னணி இந்திய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் சாதகமாக அமைந்ததாலும், சர்வதேச சந்தைகளில் சாதகமான போக்கு காணப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் நிலவியது சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஆசிய பங்குச்சந்தைகள் ஐந்தாவது நாளாக இன்றும் ஏற்றத்துடன் காணப்பட்டன. ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவை சந்தித்தன.
    Next Story
    ×