search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி நகராட்சி தேர்தல்: 3 நகராட்சிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் 188 இடங்களில் முன்னிலை
    X

    டெல்லி நகராட்சி தேர்தல்: 3 நகராட்சிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் 188 இடங்களில் முன்னிலை

    டெல்லிக்கு உட்பட்ட 3 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் 188 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதையடுத்து வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று நகராட்சிகளையும் பா.ஜ.க கைப்பற்றுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகவும் நாட்டின் தலைநகராகவும் திகழும் டெல்லி பகுதியை நிர்வாக ரீதியாக மூன்று நகராட்சிகளாக பிரித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி நகராட்சிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வடக்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் தெற்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள 64 வார்டுகள் என மொத்தமுள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு மட்டும் புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் 53.58 சதவீதம் வாக்குகள் பதிவானது.



    மத்தியில் ஆளும் பா.ஜ.க., டெல்லி ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை தவிர பல சுயேட்சை வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள இந்த தேர்தலுக்காக சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில், நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் மூன்று நகராட்சிகளிலும் முன்னிலை வகித்து வந்தனர்.

    காலை 11 மணி நிலவரப்படி வடக்கு டெல்லியில் உள்ள 70 வார்டுகளிலும், தெற்கு டெல்லியில் உள்ள 70 வார்டுகளிலும் கிழக்கு டெல்லியில் உள்ள 48 வார்டுகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இவர்களை நெருங்க முடியாத தூரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×