search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு
    X

    குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு

    முறைகேடுகளை தடுக்க ‘ஸ்ரீவாரி அனுக்கிரஹம்’ என்ற பெயரில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
    திருமலை:

    முறைகேடுகளை தடுக்க ‘ஸ்ரீவாரி அனுக்கிரஹம்’ என்ற பெயரில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜூன் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதுலவாடா கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான, திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை, ஆந்திர மாநில அரசு 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி நியமித்தது. 2 ஆண்டுகள் பதவி வகித்த தேவஸ்தான அறங்காவலர் குழுவின் பதவி காலம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் கடைசி கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    நான் 2 ஆண்டுகள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தேன். உலக பக்தர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தேன், மகிழ்ச்சியாக இருந்தது.

    நான், அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தரிசனத்துக்காக சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. கோவிலில் 3 தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அதிக நேரம் காத்திருக்காமல் 2 மணிநேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 86 இ.தரிசன கவுண்ட்டர்கள் உள்ளன. அனைத்துக் கவுண்ட்டர்களும் மூடப்படவில்லை. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். எனினும், வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழக்கம்போல் வழங்கப்படுகிறது.

    பின்னர் அறங்காவலர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த 2 ஆண்டுகளில் பக்தர்களுக்கு உகந்த பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க எலக்ட்ரானிக் எந்திரம் மூலம் குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி அனுக்கிரஹம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.

    ஏழுமலையானுக்கு சொந்தமான 7,000 கிலோ தங்கம் 2.5 சதவீத வட்டி தரும் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் பக்தர்கள் செலுத்திய தலைமுடி காணிக்கையை ஏலம் விட்டதன் மூலம் ரூ.5.27 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்ரீ சைலம் வனப்பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் செம்மரக் கன்றுகள் நடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×