search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நக்சலைட்களுக்கு எதிராக ஆல்-அவுட் தாக்குதல்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
    X

    நக்சலைட்களுக்கு எதிராக ஆல்-அவுட் தாக்குதல்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

    நக்சலைட்களுக்கு எதிராக எல்லாவிதத்திலும் தாக்குதலை அதிகப்படுத்துங்கள் என்று பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர். பி.எப்.) அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர்.

    சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழர்கள். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

    இந்நிலையில், நக்ஸலைட்களுக்கு எதிராக எல்லாவிதத்திலும் தாக்குதலை அதிகப்படுத்துங்கள் என்று பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மூத்த பாதுகாப்புத் துறை ஆலோசகர் விஜய் குமார் மற்றும் சி.ஆர்.பி.எப். செயல் தலைவர் சுதீப் லக்தகியா ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, “இரண்டரை மாதத்திற்குள் நக்சலைட்டுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து நல்ல முடிவை காட்டுங்கள் என்று” ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். நம்முடைய வீரர்கள் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன, தவறுகள் எதனால் நிகழ்கிறது என்று பல்வேறுவிதமான கேள்விகளை அவர் கேட்டார்.

    இதனையடுத்து மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள 10 மாநிலங்களின் உயர் அதிகாரிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் வருகின்ற மே 8-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×