search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்குள் புகுந்து ரூ.40 ஆயிரம் பணத்தை தின்ற யானை
    X

    கடைக்குள் புகுந்து ரூ.40 ஆயிரம் பணத்தை தின்ற யானை

    அசாமில் தேயிலை தோட்டத்தில் இருந்த கடைக்குள் புகுந்த யானை ஒன்று அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை தின்றுவிட்டது.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தேவைக்காக கடைகள் செயல்படும்.

    இதே போல சோனிப்பூர் என்ற இடத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் ராஜேந்திர துகார் என்பவர் கடை வைத்திருந்தார். இந்த கடையில் மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள், எழுது பொருட்கள் போன்றவை விற்கப்பட்டு வந்தன.

    கடையில் வசூல் ஆன ரூ.40 ஆயிரம் பணத்தை இரவில் கடைக்குள் வைத்து விட்டு கடையை பூட்டி சென்றார். ரூ.26 ஆயிரத்தை ரூ.100 நோட்டு கட்டாகவும், ரூ. 14 ஆயிரத்தை ரூ.10 நோட்டுகட்டுகளாகவும் கட்டி வைத்து இருந்தார்.

    இரவில் யானை ஒன்று இந்த தோட்டத்திற்குள் நுழைந்தது. கடை பகுதிக்கு வந்த யானை கடையின் சுவரை உடைத்து விட்டு அங்கிருந்த அரிசி மற்றும் மளிகை பொருட்களை சாப்பிட்டது. இத்துடன் ரூ.40 ஆயிரம் பணக் கட்டுகளையும் தின்றுவிட்டது.

    அதன்பிறகு அங்கிருந்த சென்ற யானை வழியில் ரூ.10 நோட்டு கட்டை மட்டும் வாந்தி எடுத்து இருந்தது. இதில் இருந்த ரூ.14 ஆயிரம் பணமும் கீழே சிதறி கிடந்தது.

    ரூ.100 நோட்டுகளையும் வேறு எங்கேயாவது வாந்தி எடுத்து இருக்கலாம் என்று தேடிப் பார்த்தனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
    Next Story
    ×