search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி வேண்டாம்: பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம்
    X

    அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி வேண்டாம்: பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம்

    அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் இருந்து அனைத்து வகையான இறைச்சி உணவுகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பீட்டா அமைப்பு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது
    புதுடெல்லி:

    அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படுவது தான் விலங்குகள் நல அமைப்பு பீட்டா. இதன் கிளை இந்தியாவிலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்த பீட்டா அமைப்பு சார்பில் தான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பீட்டா அமைப்பானது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அதில், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் இருந்து அனைத்து வகையான இறைச்சி உணவுகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    தமது கடிதத்தில் ஜெர்மன் நாட்டு அமைச்சகம் தமது அரசு தரப்பு விருந்துகளில் இருந்து இறைச்சி உண்வுகளை தடை செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் உலகத்திற்கே வழிகாடியாக இருக்க முடியும் என்று பீட்டா வலியுறுத்தி உள்ளது.

    பி.ஜே.பி. தலைமையிலான அரசில் இறைச்சி தொடர்பான பிரச்சனை முக்கிய அம்சமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×