search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு
    X

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. ஜனாதிபதியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓட்டு மதிப்பு தனியாக நிர்ணயிக்கப்படும்.

    ஒரு மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை 100-ஆல் பெருக்கி அதை மாநில மக்கள் தொகையுடன் வகுத்தால் வரும் எண்ணிக்கை எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு ஆகும்.

    எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு என்பது வேறு மாதிரி கணக்கிடப்படும். இதன்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு இரு அவையின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை கொண்டு வகுக்கப்படும். இதில் வரும் எண்ணிக்கை எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பாக இருக்கும்.

    இதன்படி நாட்டில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின்படி பாரதீய ஜனதா கூட்டணிக்கே அதிக ஓட்டுகள் உள்ளன. பாரதீய ஜனதா கூட்டணியில் மொத்தம் 23 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி அந்த கட்சிக்கு 48.64 சதவீத ஓட்டுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியிலும் 23 கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணிக்கு 35.45 சதவீத ஓட்டுகள் இருக்கின்றன. இந்த கணக்கின்படி பாரதீய ஜனதா கூட்டணிக்கு 13 சதவீத ஓட்டுகள் அதிகமாக உள்ளன.


    பாரதீய ஜனதா கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே தனியாக 40 சதவீத ஓட்டுகள் தனியாக இருக்கின்றன. அதை விடவும் காங்கிரஸ் கூட்டணிக்கு குறைவான ஓட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2 கூட்டணியில் சேராத கட்சிகள் 13 சதவீத ஓட்டுகள் வைத்துள்ளன. இந்த கட்சிகளின் ஒரு பிரிவினர் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கலாம்.

    ஏற்கனவே உள்ள ஓட்டுகளின் அடிப்படையிலேயே பாரதீய ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எந்த கூட்டணியிலும் சாராத சில கட்சிகளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வரலாம்.

    எனவே, இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடம் கிடைத்ததால் அந்த கட்சிக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த 5 மாநில தேர்தல் மூலம் மட்டுமே 5.2 சதவீத ஓட்டுகள் பாரதீய ஜனதாவுக்கு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×