search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன அத்துமீறலுக்கு பதிலடி: அமெரிக்கா- ஜப்பானுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி
    X

    சீன அத்துமீறலுக்கு பதிலடி: அமெரிக்கா- ஜப்பானுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி

    சீன அத்து மீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா ஜப்பானுடன் சேர்ந்து ராணுவ பயிற்சில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி வருகிற ஜூலை மாதம் நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    ஆசியாவில் பெரிய சக்தியாக உருவாகி வரும் சீனா, பக்கத்து நாடுகளை மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நாட்டின் ராணுவ கப்பல்கள், விமானங்கள் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற பகுதிகளில் அடிக்கடி ஊடுருவி வருகின்றன.

    இந்தியாவை பொருத்தவரை வங்க கடலில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா ஜப்பானுடன் சேர்ந்து ராணுவ பயிற்சில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி வருகிற ஜூலை மாதம் நடைபெறுகிறது.

    வங்க கடல் பகுதியில் இந்த பயிற்சி நடைபெறும். இதில் விமானம் தாங்கி கப்பல்கள், பல வகை போர் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன.


    எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை எப்படி கண்டறிந்து அழிப்பது என்பது குறித்து முக்கியமாக இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு விதமான எதிர் தாக்குதல் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

    எந்த தேதியில் போர் பயிற்சி நடைபெறும் என்பது குறித்து 3 நாடுகளின் அதிகாரிகள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது பயிற்சி நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பானுடன் சேர்ந்து இந்தியா போர் பயிற்சி பெறுவதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையே ஏற்கனவே பல தடவை ராணுவ பயிற்சிகள் நடந்துள்ளன. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆன பிறகு இப் போது முதல் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கு டொனால்டு டிரம்பும் அனுமதி அளித்துள்ளார்.

    Next Story
    ×