search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி உள்ளாட்சி தேர்தல்: 54 சதவீதம் வாக்குகள் பதிவானது
    X

    டெல்லி உள்ளாட்சி தேர்தல்: 54 சதவீதம் வாக்குகள் பதிவானது

    டெல்லியில் நடைபெற்ற மூன்று நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு நகராட்சிகளில் உள்ள 272 வார்டுகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆம்தி அரசுக்கும், பா.ஜ.க.,வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    வடக்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் தெற்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள 64 வார்டுகளுக்கு காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    வாக்குப் பதிவு தொடங்கியது முதல் 18 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இது மாற்றப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மாலை 5.30 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது.

    இந்நிலையில் டெல்லி உள்ளாட்சி தேர்தலில் இறுதியாக 54 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் தேர்தலிலும் 53.9 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது.

    இன்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×