search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராடும் தமிழக விவசாயிகள் கூடாரங்களை அகற்ற டெல்லி போலீஸ் உத்தரவு
    X

    போராடும் தமிழக விவசாயிகள் கூடாரங்களை அகற்ற டெல்லி போலீஸ் உத்தரவு

    கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் தங்கள் கூடாரங்களை அகற்ற வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள்  டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் போராடி வருகின்றனர். ஒரு மாதத்தை தாண்டியும் மத்திய அரசு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை.

    இந்நிலையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மீண்டும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.



    இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து சக விவசாயிகளுடன் போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனை நடத்தினார். பின்னர், இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். அத்துடன், அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் வரை காத்திருப்போம் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.



    இன்று விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்காத நிலையில், ஜந்தர் மந்தரில் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களை  உடனடியாக அகற்றும்படி டெல்லி காவல்துறை உத்தரவிட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

    விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சிறிது கால அவகாசம் அளிப்பதாக கூறிய டெல்லி காவல்துறை, 3 நாட்களுக்குள் கூடாரங்களை அகற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது.

    Next Story
    ×