search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரொக்க பரிமாற்றத்துக்கான ரூ.2 லட்சம் உச்சவரம்பு வங்கியில் பணம் எடுக்க பொருந்தாது: வருமான வரித்துறை விளக்கம்
    X

    ரொக்க பரிமாற்றத்துக்கான ரூ.2 லட்சம் உச்சவரம்பு வங்கியில் பணம் எடுக்க பொருந்தாது: வருமான வரித்துறை விளக்கம்

    ரொக்க பரிமாற்றத்துக்கான ரூ.2 லட்சம் உச்சவரம்பு, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கு பொருந்தாது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது
    புதுடெல்லி:

    ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர், நிதி மசோதாவில் செய்யப்பட்ட திருத்தத்தில், இந்த உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உட்பிரிவு குறித்து வருமான வரித்துறை நேற்று புதிய விளக்கம் அளித்தது.

    இதன்படி, ரொக்க பரிமாற்றத்துக்கான ரூ.2 லட்சம் உச்சவரம்பு, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கு பொருந்தாது. இதுதொடர்பான அறிவிக்கை, விரைவில் வெளியிடப்படும்.

    ஒரே நாளில் ஒரே பரிமாற்றம் மூலம் ஒரு தனிநபர் மற்றொரு தனிநபரிடம் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றத்தில் ஈடுபடக்கூடாது என்றும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதை மீறினால், ரூ.2 லட்சத்துக்கு மேல், எவ்வளவு தொகை ரொக்கமாக பரிமாறப்பட்டதோ, அதே அளவு தொகை, அபராதமாக விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

    அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையை ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக அளிக்க வேண்டும். அறக்கட்டளைகளுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு கோர முடியாது என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. 
    Next Story
    ×