search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணர் குறித்த சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்டார்
    X

    கிருஷ்ணர் குறித்த சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்டார்

    கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்கு ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    புது டெல்லி:

    உத்தரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்பு படையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் டுவிட் செய்திருந்தார்.

    அதில், “ரோமியோ ஒரே ஒரு பெண்ணை தான் காதலித்தார். ஆனால் கிருஷ்ணன் ஒரு பழம்பெரும் கிண்டல்காரன். அதனால் தைரியம் இருந்தால், ரோமியோ எதிர்ப்பு படையின் பெயரை கிருஷ்ணன் எதிர்ப்பு படை என்று மாற்றுவாரா?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பிரசாந்த் பூஷனின் இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை பிரசாந்த் பூஷனின் கருத்து காயப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியது.



    இந்த நிலையில், கிருஷ்ணர் குறித்த தனது கருத்துக்கு பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் “ரோமியோ படைகள் மற்றும் கிருஷ்ணன் குறித்தான என்னுடைய டுவிட் பொருத்தமற்றது என உணர்ந்துவிட்டேன். தற்செயலாக அதிகமான மக்களின் உணர்வை எனது டுவிட் புண்படுத்திவிட்டது.  அதற்கு மன்னிப்பு கேட்கின்றேன், டுவிட்டை நீக்கிவிட்டேன்” என பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×