search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக் கூடங்களுக்கு `சீல்: மாநில அரசு அதிரடி
    X

    பீகாரில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக் கூடங்களுக்கு `சீல்': மாநில அரசு அதிரடி

    பீகார் மாநிலம் ரோத்தஸ் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக் கூடங்களுக்கு, மாநில அரசு `சீல்' வைத்துள்ளது.
    பாட்னா:

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி வரிசையாக இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், பீகார் மாநிலம் ரோத்தஸ் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக்கூடங்களுக்கு காவல்துறை இன்று `சீல்' வைத்துள்ளது.

    சமீபத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டது.



    எனினும் நீதிமன்ற உத்தரவு இதற்குக் காரணமில்லை என்றும், 2012-ம் ஆண்டிலேயே அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டதாகவும், பீகார் கால்நடைத்துறை அமைச்சர் அவாதேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுக்கள் அமைத்து அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களுக்கு `சீல்' வைக்கும்படி கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.இவ்வாறு `சீல்' வைக்கப்படும் இறைச்சிக்கூடங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின், மீண்டும் செயல்படத் துவங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
    Next Story
    ×