search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய நமஸ்காரமும், தொழுகையும் ஒன்று தான்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு
    X

    சூரிய நமஸ்காரமும், தொழுகையும் ஒன்று தான்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு

    சூரிய நமஸ்காரமும், தொழுகையும் ஒன்று தான் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
    லக்னோ:

    உத்திர பிரதேசம் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற யோகா உத்சவ் விழாவில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். 

    நிகழ்ச்சியில் யோகி பேசியதாவது: 

    சூரிய நமஸ்காரத்தில் உள்ள அனைத்து ஆசனங்கள் நமது முஸ்லீம் சகோதரர்கள் செய்யும் தொழுகையோடு ஒத்திருக்கின்றது. இந்த இரண்டினையும் ஒன்றினைக்க ஒருவரும் ஒருபோது முயற்சிக்கவில்லை. ஏனெனில் சிலர் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள், யோகாவை அல்ல. 

    யோகா கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பிரதமர் மோடியை தான் சேரும். யோகாவை மக்களிடம் கொண்டு செல்ல பாபா ராம் தேவ் பணிகள் செய்தார். தனி மனித ஒழுக்கத்தை அடைய யோகா சிறந்த வழி.



    உத்தர பிரதேசத்தில் நான் இருந்து கொண்டிருக்கிற வரை, சாலைகளில் பாராளுமன்றத்திற்கு சென்றேன். சாலைகளில் ஒரு சாதுவை போல் நடந்தேன். எனக்கு தெரியும் உத்திர பிரதேசத்தை எந்த நோய்கள் தாக்கியுள்ளது என்று எனக்கு தெரியும். அதற்கு மருந்து என்னவென்றும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பாஜக கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஒரு வரை கூட பாஜக நிறுத்த வில்லை. இதனால் உ.பி. சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×