search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் மீது பாலியல் புகார்: நாளந்தா பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா
    X

    மாணவர்கள் மீது பாலியல் புகார்: நாளந்தா பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா

    மாணவர்கள் மீதான பாலியல் புகார் விவகாரத்தால் நாளந்தா பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்துள்ளார்.
    பாட்னா:

    பீகார் பல்கலைகழகம் பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தென்கிழக்கே அமைந்துள்ளது. உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழங்களில் ஒன்றாக, நாளந்தா இருந்துள்ளது. அந்த காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்திருக்கின்றனர்.

    டாக்டர் அப்துல்கலாம் நாளந்தா பல்கலைகழகத்தை மீண்டும் புதுப்பிக்கவும் அதில் மாணவ-மாணவிகள் கல்வி பயிலவும்  மத்திய அரசிடம் 2006-ல் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று நாளாந்தா பல்கலைகழகத்தை புதுப்பிக்க மத்திய அரசு 2010-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

    இந்நிலையில், நாளந்தா பல்கலைக் கழகத்தின் இடைக்கால துணை வேந்தர் பங்கஜ் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    பல்கலைக் கழகத்தில் இரண்டு மாணவர்கள் பாலியல் புகாரில் சிக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இதர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மாணவர்களில் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பங்கஜ் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.  
    Next Story
    ×