search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிறுவனங்கள் ஏற்ற மறுப்பு: மும்பையிலிருந்து காரில் டெல்லி சென்ற சிவசேனா எம்.பி
    X

    விமான நிறுவனங்கள் ஏற்ற மறுப்பு: மும்பையிலிருந்து காரில் டெல்லி சென்ற சிவசேனா எம்.பி

    விமான நிறுவனங்கள் டிக்கெட்டை ரத்து செய்ததால், பாராளுமன்றத் தொடரில் பங்கேற்க சிவசேனா எம்.பி கெய்க்வாட் மும்பையிலிருந்து டெல்லிக்கு காரில் பயணம் செய்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த கெய்க்வாட் இருக்கை பிரச்சினை காரணமாக ஏர் இந்தியா மேனேஜரை செருப்பால் 25 முறை அடித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

    இதைத்தொடர்ந்து கெய்க்வாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் விமானத்தில் செல்ல ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.

    இன்று காலை மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்கு கெய்க்வாட் நேற்று டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால், கெய்க்வாட்டின் டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டது.



    இந்த நிலையில், பாராளுமன்றத் தொடரில் பங்கேற்க கெய்க்வாட் கார் மூலமாக மும்பையிலிருந்து டெல்லி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மும்பையிலிருந்து கெய்க்வாட் கார் மூலமாக இன்று டெல்லி வந்தடைவார் என்றும், ஆனால் பாராளுமன்றத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

    இன்று காலை ஐதராபாத்திலிருந்து டெல்லி செல்ல கெய்க்வாட் ஏர் இந்தியா நிறுவனத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால் இந்த டிக்கெட்டையும் அந்நிறுவனம் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×