search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துவரம் பருப்புக்கு வரி விதிப்பு - கோதுமைக்கு 10 சதவீத இறக்குமதி வரி
    X

    துவரம் பருப்புக்கு வரி விதிப்பு - கோதுமைக்கு 10 சதவீத இறக்குமதி வரி

    கோதுமைக்கும், துவரம்பருப்புக்கும் அடிப்படை சுங்க வரியாக தலா 10 சதவீதம் வரி விதித்து, அதை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கோதுமைக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் கோதுமை தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யவும், விலை உயர்வை தடுக்கவும் மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி இந்த 10 சதவீத வரி விதிப்பை ரத்து செய்தது. துவரம்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில், கோதுமைக்கும், துவரம்பருப்புக்கும் அடிப்படை சுங்க வரியாக தலா 10 சதவீதம் வரி விதித்து, அதை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதற்காக 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று அறிவித்தார்.

    தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கோதுமை, சந்தைக்கு வரத்தொடங்கி இருக்கிறது. துவரை உற்பத்தி அதிகரித்திருப்பதால், நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். சில இடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை கூட கிடைக்காமல் அவர்கள் அல்லாடி வந்தனர்.

    இந்த நிலையில், இவ்விரு உணவு தானியங்களுக்கும் தலா 10 சதவீத இறக்குமதி வரி விதித்திருப்பது, உள்நாட்டில் இந்த தானியங்களுக்கு கிராக்கியை ஏற்படுத்தும். இதன்மூலம் மொத்த விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தவும் முடியும். அந்த வகையில் இது விவசாயிகளுக்கு உதவிகரமாக அமையும். 
    Next Story
    ×