search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை வேலி திட்டத்தை மியான்மர் கைவிட மத்திய அரசு வலியுறுத்தவேண்டும்: நாகலாந்து சட்டசபையில் தீர்மானம்
    X

    எல்லை வேலி திட்டத்தை மியான்மர் கைவிட மத்திய அரசு வலியுறுத்தவேண்டும்: நாகலாந்து சட்டசபையில் தீர்மானம்

    இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசு வலியுறுத்தக் கோரி நாகலாந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    கோகிமா:

    இந்தியாவின் நாகலாந்து மாநிலம், மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. எல்லையின் இரு புறங்களிலும் வசித்து வரும் நாகா இன மக்களிடையே நல்ல உறவுமுறைகள் உள்ளன. இந்நிலையில், டுயென்சங்க மாவட்டம் பாங்ஷா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் வேலி அமைக்க மியான்மர் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நாகலாந்து சட்டமன்றத்தில் கடந்த 24-ம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் லங்கன் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். மியான்மர் அரசு எல்லையில் வேலி அமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிடும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் எந்த திருத்தமும் செய்யப்படாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×