search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் விரைவில் ‘சீல்’ வைக்கப்படும்: ராஜ்நாத்சிங்
    X

    பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் விரைவில் ‘சீல்’ வைக்கப்படும்: ராஜ்நாத்சிங்

    தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் விரைவில் ‘சீல்’ வைக்கப்படும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள டேக்னாபூர் எல்லை பாதுகாப்பு படையின் அணி வகுப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் எல்லைகளை முறையாக பாதுகாக்கும் பொறுப்பை எல்லைப் பாதுகாப்பு படை சிறப்பாக செய்து வருகிறது. இதன் காரணமாகவே எல்லைப் பாதுகாப்பு படை மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்து வருகிறது.

    சர்வதேச எல்லைப் பகுதியான பாகிஸ்தான், வங்காள தேசத்தில் சீல் வைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும். எல்லை வழியாக ஊடுருவல் அதிகரித்து உள்ளது. இதை தடுக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    எல்லை பகுதிகளில் எங்கெல்லாம் கம்பி வேலி அமைக்க முடியுமோ அங்கெல்லாம் வேலிகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்படும். வேலிகள் அமைக்க முடியாத எல்லை பகுதிகள் நவீன தொழில் நுட்ப உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்படும்

    நக்சல் தீவிரவாதம் கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதம் குறைந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினைக்கு மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்கான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

    Next Story
    ×