search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 20 பேர் காயம்
    X

    ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 20 பேர் காயம்

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஜபல்பூர்:

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரின் கமாரியா பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு, 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையில், வெடிபொருட்களின் மூலக்கூறுகள், ஹார்டுவேர், ஷெல், துப்பாக்கி தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. வெடிமருந்து நிரப்பும் பணியும் நடைபெறுகிறது.

    இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தொழிற்சாலைக்குள் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 50 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

    தொழிற்சாலையில் இருந்து 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

    வெடி மருந்து நிரப்பும் மையத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதாக கமாரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×