search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை எம்.பி. ராம் ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி
    X

    மாநிலங்களவை எம்.பி. ராம் ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி

    பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கொச்சி:

    பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி (வயது 94), வழக்கறிஞர் குழு நடத்தும் பாராட்டு விழால் கலந்துகொள்வதற்காக கேரள மாநிலம் கொச்சிக்கு வந்திருந்தார். வந்த இடத்தில் அவருக்கு இன்று மதியம் 12.45 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால், உடடினயாக அவர் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு இதயம் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கே.அப்துல்லா தெரிவித்தார்.

    இதற்கிடையே ராம் ஜெத்மலானி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×