search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் வியூகம் அமைக்க அடுத்த மாதம் கூடுகிறது பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம்
    X

    பாராளுமன்ற தேர்தல் வியூகம் அமைக்க அடுத்த மாதம் கூடுகிறது பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம்

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
    புவனேஷ்வர்:

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது.

    தொடர் வெற்றிகளால் மகிழ்ச்சியில் உள்ள பா.ஜ.க, இதே உற்சாகத்துடன் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகவே உள்ளது. இத்தேர்தலுக்கான முக்கிய வியூகங்களை வகுப்பதற்காக பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் அடுத்தமாதம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா, மேகாலயா மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றவும் பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்து வருகின்றது. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களை அமித் ஷா அவ்வப்போது நடத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
    Next Story
    ×