search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து மில்லுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் அம்பேத்கர் நினைவிடம் அமைக்க ஒதுக்கீடு
    X

    இந்து மில்லுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் அம்பேத்கர் நினைவிடம் அமைக்க ஒதுக்கீடு

    மராட்டிய மாநிலத்தில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இருந்த இந்து மில்லுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலமானது அம்பேத்கர் நினைவிடம் அமைப்பதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தின் மத்திய மும்பை பகுதியில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இந்து மில் செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த மில்லுக்கு சொந்தமான இடத்தில் சட்டமேதை அம்பேத்கர்-க்கு நினைவிடம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து அம்மாநில அரசு முறைப்படி மத்திய ஜவுளித்துறையிடம் கோரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற ஜவுளித்துறை, இந்து மில் பகுதியில் இருந்த 12 ஏக்கர் நிலத்தை அம்பேத்கர் நினைவிடம் அமைப்பதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று அம்மாநில சட்டசபையில் நடைபெற்றது. அப்போது மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்ருதிமி இராணி நிலத்திற்கான ஆவணங்களை மராட்டிய முதல் மந்திரி தேவேந்திரநாத் பட்நாவிஸ் வசம் ஒப்படைத்தார். இந்நிகழ்சியில் மத்திய சமூக நீதி அமைச்சக இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    நிலத்திற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்ட பட்நாவிஸ் ,பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஸ்ருதிமி இராணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், மக்கள் மகிழும் வண்ணம் அம்பேத்கர் நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×