search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு ஊடக பத்திரிகையாளர்களையும் சம்பள கமிஷனின் கீழ் இணைக்க வேண்டும்: எம்.பி வேண்டுகோள்
    X

    மின்னணு ஊடக பத்திரிகையாளர்களையும் சம்பள கமிஷனின் கீழ் இணைக்க வேண்டும்: எம்.பி வேண்டுகோள்

    மின்னணு ஊடகங்களையும் பத்திரிகையாளர்கள் சம்பள கமிஷனின் கீழ் இணைக்க வேண்டும் என, பாராளுமன்றத்தில் எம்.பி சம்பத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
    புது டெல்லி:

    உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம் 1955-ன் படி 5 வருடங்களுக்கு ஒருமுறை பத்திரிகையாளர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மின்னணு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களையும் பத்திரிகையாளர்கள் சட்டம் 1955-ன் கீழ்  இணைக்க வேண்டும் என, பாராளுமன்றத்தில் எம்.பி. சம்பத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.



    பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சம்பத் பேசும்போது, “பத்திரிகையாளர்களின் சம்பள விகிதம் தொடர்பாக மஜீதியா சம்பள கமிஷனின் பரிந்துரைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டன. தற்போது புதிய சம்பள கமிஷன் அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. எனவே, பத்திரிகையாளர்களுக்கு புதிய சம்பள கமிஷன் உருவாக்க வேண்டும்.

    மேலும், பத்திரிகையாளர்கள் சட்டம் 1955-ன் கீழ் மின்னணு ஊடகங்களில் பணியாற்றுவோரையும் இணைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
    Next Story
    ×