search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
    X

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபையை 20-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.



    3 நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து மார்ச் 20-ல் கூட்டத்தொடர் தொடங்கியதும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீது பொது விவாதம், முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் மற்றும் வாக்கெடுப்பு, மானியக்கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

    சபாநாயகர் மீது தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் பதிலுரை வழங்கினார். அத்துடன் அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.



    இவ்வாறு 6 நாட்கள் பரபரப்பாக நடந்த பட்ஜட் கூட்டத் தொடர் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
    Next Story
    ×