search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி
    X

    தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி

    தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கும், நிலத்தடி நீர் குறைந்து உப்பு நீர் உட்புகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தினர்.

    இதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு 2013ம் ஆண்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு தமிழக அரசு நிரந்தர தடை விதித்தது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

    பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நிபுணர் குழு கூடி விவாதித்து, திருத்தப்பட்ட படிவத்தை ஏற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் மீத்தேன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×