search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி அமரீந்தர்சிங், நவ்ஜோத் சிங் சித்து
    X
    முதல்-மந்திரி அமரீந்தர்சிங், நவ்ஜோத் சிங் சித்து

    டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றால் சித்துவின் இலாகாவை மாற்றுவேன்: முதல்-மந்திரி அமரீந்தர் சிங்

    டி.வி. நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றால் சித்துவின் இலாகா மாற்றப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கேப்டன் அமரீந்தர்சிங் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரி சபையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து கலாச்சாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சித்து முன்பு பா.ஜனதாவில் எம்.பி.யாக இருந்தார். கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக பா.ஜனதாவில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அவர் காங்கிரசில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியான பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    இதைத் தொடர்ந்து வக்கீல் ஒருவர் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மந்திரியாக இருப்பவர் டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்பவர் அது அவரை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பது போல் ஆகும் என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


    பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர்சிங்

    ஏற்கனவே நடிகர் அனுபம் கேரின் மனைவியும் நடிகையுமான கிரன்கேர் எம்.பி.யாக இருந்து கொண்டு சினிமாவில் நடிக்க சித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக கிரன்கேர் 3 சினிமா பட வாய்ப்புகளை இழந்தார். தொடர்ந்து அவரால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.

    தற்போது அதே நிலை சித்துவுக்கும் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி முதல்-மந்திரி அமரீந்தர்சிங் கூறும் போது, சித்து தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளில கலந்து கொண்டால் அவரது இலாகா மாற்றம் செய்யப்படும். நடிப்பு மற்றும் காட்சிகளில் தோன்றுவது தொடர்பானவற்றுடன் கலாச்சாரத்துறை தொடர்புடையது. எனவே அதே இலாகாவில் பதவி வகிக்க கூடாது. மாற்றம் செய்யப்படும் என்றார்.
    Next Story
    ×