search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் ஊழல் புகாரில் சிக்கிய 40 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு: முதல்-மந்திரி உத்தரவு
    X

    உ.பி.யில் ஊழல் புகாரில் சிக்கிய 40 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு: முதல்-மந்திரி உத்தரவு

    உத்தரப்பிரதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய 40 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அகிலேஷ்யாதவ் நியமித்த அரசு சார்பற்ற நியமனங்களை ரத்து செய்தார்.

    தொடர்ந்து பசுவதையை தடுக்கும் முயற்சியாக பசுக்கள் கடத்தலுக்கு தடை விதித்தல் மற்றும் பசுவதை கூடங்களை மூட உத்தரவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதே போல் அனுமதியில்லாமல் செயல்படும் மாட்டிறைச்சி கடைகளை கண்காணிக்கவும் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் ஊழல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் ஊழல் புகாரில் சிக்கிய 20 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் இருந்தது.

    தற்போது 20 போலீஸ்காரர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநில போலீஸ் டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×