search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனே பணி திரும்ப வேண்டும் - மும்பை உயர் நீதிமன்றம்
    X

    ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனே பணி திரும்ப வேண்டும் - மும்பை உயர் நீதிமன்றம்

    மராட்டிய மாநிலத்தில் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திவரும் 3000 மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திவரும் 3000 மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் மருத்துவர்கள் மீதான, நோயாளியுடைய உறவினர்களின் தாக்குதல்களுக்கு எதிராக சுமார் 3000 மருத்துவர்கள் விடுப்புப் போராட்டம் நேற்று முந்தினம் முதல் நடத்திவந்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான உறுதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் போராட்டத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்து வந்தது.

    அத்தியாவசிய சிகிச்சைகளை மூத்த மருத்துவர்கள் மேற்கொண்டாலும், இந்த போராட்டத்தால் ஏராளமான நோயாளிகள் முறையான மருத்துவ சிகிச்சையை இழந்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த சுமார் 400 அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    மருத்துவர்களின் போராட்டம் குறித்து விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றம், மருத்துவர்களின் போராட்டத்தால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என உத்தரவிட்டனர். மீறி போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
    Next Story
    ×