search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவுடனான உறவை விட அங்கு வசிக்கும் இந்தியர்களே முக்கியம் - சுஷ்மா ஸ்வராஜ்
    X

    அமெரிக்காவுடனான உறவை விட அங்கு வசிக்கும் இந்தியர்களே முக்கியம் - சுஷ்மா ஸ்வராஜ்

    அமெரிக்காவுடனான உறவை விட அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனே முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவுடனான உறவை விட அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனே முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து நேற்று மாநிலங்களவையில் இடதுசாரி கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:-

    அமெரிக்க அரசுடனான வர்த்தகம் மற்றும் ராணுவ உறவு என்பது அங்கு வசிக்கும் இந்தியர்கள் நலனை ஒப்பிடும்போது இரண்டாம்பட்சமே. இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர்களின் பாதுகாப்பே முக்கியம். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

    சமீபகாலங்களில் அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இனவெறி இருப்பதையும் நாம் ஒதுக்கி விட முடியாது. இருந்தாலும் இத்தாக்குதல்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணையின் முடிவில் தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவரும்.

    இந்தியர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து வழக்கமாவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது.

    இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தர். சுஷ்மாவின் பேச்சுக்கு மற்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் எழுப்பினர்.
    Next Story
    ×