search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா சட்ட மேலவைத் தேர்தல்: 9 தொகுதிகளையும் கைப்பற்றியது ஆளும் தெலுங்கு தேசம்
    X

    ஆந்திரா சட்ட மேலவைத் தேர்தல்: 9 தொகுதிகளையும் கைப்பற்றியது ஆளும் தெலுங்கு தேசம்

    ஆந்திராவில் நடந்த சட்ட மேலவைத் தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளிலும் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
    அமராவதி:

    ஆந்திரா சட்டமேலவையில் உள்ளாட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் மார்ச் 29-ம் தேதியும், 7 பேரின் பதவிக்காலம் மே 1-ம் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 9 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கடப்பா, கர்னூல் மற்றும் எஸ்.பி.எஸ்.நெல்லூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில், மூன்று தொகுதிகளையும் ஆளும் தெலுங்கு தேசம் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கோட்டையான கடப்பா தொகுதியில் அதன் வேட்பாளர் விவேகானந்த ரெட்டியை, தெலுங்கு தேசம் வேட்பாளர் 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான விவேகானந்தா, இதற்கு முன் எம்.பி., எம்.எல்.சி. மற்றும் எம்.எல்.ஏ.வாக பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் கர்னூல் தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளர் சில்பா சக்கரபாணி ரெட்டி 56 வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங். வேட்பாளர் கவுரு வெங்கட் ரெட்டியை தோற்கடித்தார். நெல்லூரில் தெலுங்கு தேசம் வேட்பாளர் வகாட்டி நாராயண ரெட்டி 87 வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங் வேட்பாளர் அனம் விஜயகுமார் ரெட்டியை தோற்கடித்தார்.

    இதன்மூலம் உள்ளாட்சி தொகுதிகளில் அடங்கிய 9 உறுப்பினர் பதவிகளையும் தெலுங்கு தேசம் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், ஒரே ஒரு எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×