search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு - 2 நாட்களில் நீதிமன்றத்திற்கு செல்வேன்:  மாயாவதி பேட்டி
    X

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு - 2 நாட்களில் நீதிமன்றத்திற்கு செல்வேன்: மாயாவதி பேட்டி

    உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்கள் தொடர்பாக இன்னும் 2-3 நாட்களில் நீதிமன்றத்தை அணுகப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் வெறும் 19 இடங்களை மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. கடந்த சட்டப் பேரவையில் மாயாவதியின் கட்சி 80 எம்.எல்.ஏ.க்களை தன் வசம் வைத்திருந்தது.

    கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 325 இடங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×