search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் வேட்பாளர் குன்ஹாலி குட்டி மனு தாக்கல்
    X

    மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் வேட்பாளர் குன்ஹாலி குட்டி மனு தாக்கல்

    கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் குன்ஹாலி குட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காலியாக இருக்கும் மலப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் குன்ஹாலி குட்டியை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

    முன்னதாக, கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காட் சையத் ஹைதரலி ஷிஹாப் தங்கல் இல்லத்துக்கு சென்ற குன்ஹாலி குட்டி, அவரை சந்தித்து ஆசி பெற்றார். வேட்பு மனுவுடன் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை குன்ஹாலி குட்டியிடம் வழங்கிய பனக்காட் சையத் ஹைதரலி ஷிஹாப் தங்கல், அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஹம்மது பஷீர், காங்கிரஸ் மூத்த தலைவர் அடியாடன் முஹம்மது,  மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் குன்ஹாலி குட்டியை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    இதையடுத்து, மலப்புரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக குன்ஹாலி குட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மல்லப்புரம் மாவட்ட கலெக்டரும் தொகுதி தேர்தல் அதிகாரியுமான அமித் மீனாவிடம் அவர் வேட்பு மனுவையும் இதர ஆவணங்களையும் அளித்தார்.
    Next Story
    ×