search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர்கள் தேர்வில் எங்கள் தலையீடு இல்லை - ஆர்.எஸ்.எஸ்
    X

    முதல்வர்கள் தேர்வில் எங்கள் தலையீடு இல்லை - ஆர்.எஸ்.எஸ்

    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தலையிடவில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
    நாக்பூர்:

    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தலையிடவில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்கு மாநில பாஜக மூத்த தலைவர்கள் கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் யோகி ஆதித்யாநாத் முதல்வராகிறார் என்பது ஆர்.எஸ்.எஸ்.தலையீடு இல்லாமல் இருக்க சாத்தியமில்லை என்றே பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    மேலும், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர்கள் தேர்வில் ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைகளை தான் பா.ஜ.க கேட்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இணைப் பொது செயலர் பாகையா செய்தியாளர்களிடம் கூறியபோது, “முதல்வர்கள் தேர்வு என்பது அரசியல் சார்ந்த முடிவே. முதல்வர்கள் தேர்வில் பாஜகவுக்கு எந்த வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை." என தெரிவித்துள்ளார்.

    தீவிர இந்துத்துவவாதியான யோகி ஆதித்ய நாத் உத்தரப்பிரதேச முதல்வராகவும், முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் திரிவேந்திர சிங் ராவத் உத்தராகண்ட் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×