search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி : கொலை வழக்கு கைதி சுயேட்சையாக போட்டியிட்டு, இரு மடங்கு வாக்குகளை பெற்று வெற்றி
    X

    உ.பி : கொலை வழக்கு கைதி சுயேட்சையாக போட்டியிட்டு, இரு மடங்கு வாக்குகளை பெற்று வெற்றி

    உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவியை கொன்ற வழக்கில் சிறையிலிருக்கும் அமான் மனி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு இரு மடங்கு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    லக்னோ;

    உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதலே பா.ஜ.க. பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் நவுடன்வா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அமான் மணி திருப்பதி என்பவர் சுமார் 80,000 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை 32,478 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்றுள்ள அமான் மணி தனது மனைவி கொலை வழக்கில் தற்போது சிறை தன்டனை அனுபவித்து வருகிறார். சமாஜ்வாடி கட்சியில் இருந்த இவர் தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அமான் மணி சிறை தண்டணையில் இருப்பதால் வெற்றி கிட்டாது எனக் கருதிய கட்சித் தலைமை அவருக்கு சீட்டு அளிக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அமான் மணி சுயேட்சையாக போட்டியிட்டு தற்போது வெற்றியும் அடைந்துள்ளார்.

    சிறையில் இருந்த அமான் மணிக்கு அவரது இரு சகோதரிகளும் தேர்தல் பணியை முன் நடத்தி சென்று தற்போது வெற்றியை பரிசாக அளித்துள்ளனர்.
    Next Story
    ×