search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேட்டிங் துணையைத் தேர்ந்தெடுக்க கூகுளை நாடும் இந்தியர்கள்
    X

    டேட்டிங் துணையைத் தேர்ந்தெடுக்க கூகுளை நாடும் இந்தியர்கள்

    ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் டேட்டிங் துணையை தேடுவதற்கு கூகுளின் உதவியை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புது டெல்லி:

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே தங்களுக்குப் பிடித்த துணையுடன் டேட்டிங் செய்ய ஆண், பெண் இருவருமே ஆர்வம் காட்டுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் தொடங்கிய இப்பழக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

    இந்த நிலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் டேட்டிங் துணையைத் தேர்ந்தெடுக்க, கூகுளின் துணையை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டேட்டிங் தொடர்பான தேடல்கள் 50 சதவீதமும், டேட்டிங் தொடர்பான ஆப்களை தரவிறக்கம் செய்வது 53 சதவீதமும் அதிகரித்துள்ளது.




    இதற்கு அடுத்ததாக திருமணம் தொடர்பான தகவல்களை தேடுவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம். 77% இந்திய பெண்கள் உடைகளையும், 62% பெண்கள் அழகு சாதன பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
    Next Story
    ×