search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வி
    X

    கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வி

    கோவா மாநிலத்தில் மாண்ட்ரெம் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க முதல்மந்திரி லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
    பணாஜி:

    கோவா மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. மற்றும்  காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

    இந்நிலையில், மாண்ட்ரெம் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் ரகுநாத் சோப்டே-விடம் சுமார் 7100 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், பா.ஜ.க. 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இன்னும் இழுபறி நிலை நீடிப்பதால் கோவாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    Next Story
    ×