search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்
    X

    இந்தியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

    வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் கென்சாஸ் நகரில் கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸ் என்பவர், அமெரிக்காவைச் சேர்ந்த நபரால் இனவெறியுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் மற்ற இந்தியர்களை பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், டிரம்பின் கண்டனத்தையடுத்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே, “கென்சாஸ் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க மூத்த அதிகாரிகள், இது போல சம்பவங்கள் இனியும் நடைபெறாது என உறுதியாக தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். மற்ற நாடுகளின் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

    முன்னதாக கென்சாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசிய டிரம்ப், “பெருமதிப்பிற்குரிய இந்த பாராளுமன்றத்தில் இருந்தவாறு இதை போன்ற வெறுப்புணர்வு சார்ந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×