search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வழங்கியிருப்பதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இத்திட்டத்திற்கு எதிராக அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மனு அளித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த கடிதத்தையும் வழங்கினர்.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானிடம் வழங்கினோம். இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று மத்திய பெட்ரோலிய மந்திரியிடம் எடுத்துக் கூறினோம். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×