search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு இல்லை - சக்திகாந்த தாஸ்
    X

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு இல்லை - சக்திகாந்த தாஸ்

    மக்கள் நினைத்தது போல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசால் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% ஆக இருந்ததாக மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. மேலும், 2015-16-ம் ஆண்டில் 7.9% மொத்த உள்நாட்டு உற்பத்தி இருந்ததாகவும், 2016-17-ம் ஆண்டில் 7.1% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், “மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு செய்த காலக்கட்டத்தில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு வந்துவிடுமோ என மக்கள் அச்சப்பட்டனர். ஆனால், 7% மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாம் அடைந்துள்ளோம்” எனக் கூறினார்.



    ஏ.டி.எம்-களில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தாஸ், “அச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால் நான் கருத்துகள் எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறினார்.
    Next Story
    ×