search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: மோடி நம்பிக்கை
    X

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: மோடி நம்பிக்கை

    உத்தர பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏழு கட்டங்களாக் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில், இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5-வது கட்ட தேர்தல் இன்று நிறைவு பெறும் நிலையில், மார்ச் 4-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும் 8-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உத்தர பிரதேச தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை திட்டவட்டமான தோல்வியைத் தழுவப் போவது உறுதி. அதே நேரம் பாஜக கட்சி உத்தர பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    உத்தர பிரதேசத்தில் தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என (சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி) எதிர்க்கட்சிகளுக்குத் தெரிந்து விட்டது. அதனால் அக்கட்சிகள் தற்போது குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களின் விருப்பம் இத்தேர்தலில் நிறைவேறாது.



    நீங்கள் இத்தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், பாஜக கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென உத்தர பிரதேசத்தின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை. பாஜக இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    மார்ச் 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஹோலி பண்டிகையை பாஜக உற்சாகமாகக் கொண்டாடும். பாஜக ஆட்சி அமைத்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தர பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×