search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி 104 செயற்கை கோளை அனுப்புகிறார், ராகுல் பஞ்சரான சைக்கிளை தள்ளி செல்கிறார்: அமித்ஷா
    X

    மோடி 104 செயற்கை கோளை அனுப்புகிறார், ராகுல் பஞ்சரான சைக்கிளை தள்ளி செல்கிறார்: அமித்ஷா

    பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பஞ்சரான சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்கிறார் என அமித் ஷா கிண்டல் அடித்துள்ளார்.
    லக்னோ:

    பாரதிய ஜனதா அகில இந்திய தேசிய தலைவர் அமித்ஷா உத்தரபிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் மகராஜ் கஞ்ச் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேச தேர்தல் முடிவு நாட்டின் முக்கியமான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்த தேர்தலுடன் ஜாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    இந்த மாநிலத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியால் இதன் வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிட்டது. மாநிலத்தில் போதிய மின்சாரம் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை. பொதுமக்களும், பெண்களும், வர்த்தகர்களும் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.

    விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த மாநிலம் படுவீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

    11-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மாலையில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் தெரிந்துவிடும். மதியம் 1 மணிக்கு அகிலேஷ் யாதவின் ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும்.



    பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து கொண்டிருக்கிறார். ஆனால் இங்கு ராகுல்காந்தி பஞ்சரான சைக்கிளை (சமாஜ்வாடி சின்னம்) தள்ளிக் கொண்டு செல்கிறார்.

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் செயல்படும் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்படும். மாடுகள் கொல்லும் மையங்கள் இனி செயல்படாது. மாட்டு ரத்தம் ஓடுவதற்கு பதிலாக மாநிலம் முழுவதும் பாலும், நெய்யும் ஓடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×